தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0

திருச்சியில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மாவட்ட தலைவர் அழகிரிசாமி தலைமையில், மாநிலத் தலைவர் அன்பரசன் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் திலகநாதன், மேனாள் மாவட்ட தலைவர் பக்கிரிசாமி முன்னிலையில், மாவட்ட செயலாளர் பெரியசாமி வரவேற்பு உரையாற்றினார்.

16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் செல்ல விருப்பமா அல்லது மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்ல விருப்பமா என்று விருப்பத்தை ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்கும் வகையில் நடைமுறை பின்பற்ற வேண்டும்

2018 ஆம் ஆண்டு வரை 5.2 என்ற நடைமுறையில் இருந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக 7.2 என மாற்றப்பட்டுள்ளது ஏற்கனவே நடைமுறையில் இருந்த 5.2 என்ற விகித சரத்துலையே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்

- Advertisement -

கடந்த மூன்று ஊதிய குழுக்களில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாததால் ரூபாய் 500 ரூபாய் 750 ரூபாய் 2000 என தனி ஊதியமாக வழங்கப்பட்டது தற்போது வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் ரூபாய் இரண்டாயிரத்திற்கு 2 அகவிலைப்படி (DA) வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரிடமிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது பதவி உயர்வுக்கான ஊதிய உயர்வினை வழங்க வேண்டும்

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் பணி காலத்தையும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி காலத்தையும் ஒத்த பனிக்காலமாக கருதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்பதவியில் தேர்வு நிலை வழங்க வேண்டும்

அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் எட்டு பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பராமரிக்கும் வகையில் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்

2019 2020 ஆம் கல்வியாண்டில் கோவிட்-19 தொற்று காரணமாக பள்ளிகளுக்கு மாணவர்களே வர இயலாத நிலையில் ஏற்பட்டதால் மாணவரிடம் இருந்து பெற்றோர் ஆசிரியர் கழக நிதி பெறுவதில் இருந்து விலகளித்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ராஜசேகர் நன்றி உரையாற்றினார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்