தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 30 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 28 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்த பாதிப்பு 34,54,621-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து ஒரேநாளில் 79 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,16,237-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 16,001 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 359 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.