டாஸ்மாக் அருகே மது குடித்த இரண்டு பேர் சாவு
போலீசார் விசாரணை – திருச்சியில் பரபரப்பு

0

திருச்சி காட்டூர் பாத்திமாபுரத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 56) இவர் சில நாட்களாக தனது குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நேற்று அதிக அளவு மது குடித்துவிட்டு திருச்சி பாலக்கரை பகுதி மணல்வாரித்துறை ரோடு டாஸ்மார்க் கடை அருகே மதுபோதையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மகன் மணி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

இதேபோல திருச்சி உறையூர் பாளையம் பஜாரை சேர்ந்தவர் அப்துல் கிட்டு .இவரது மகன் ஜாகிர் உசேன் ( வயது 39) இவர் திருச்சி மெயின் கேட் பகுதியில் உள்ள டெக்ஸ்டைலில் பணிபுரிந்து வருகிறார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்று. மது அதிகமாக குடித்து கோணகரை டாஸ்மார்க் அருகே இறந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி நிஷா அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் மது குடித்து இறந்த சம்பவம் மது பிரியர்கள் இடையே அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்