உலக அளவில் செல்போன் பயன்படுத்துவதில் இந்தியக் குழந்தைகள் முதன்மை பெற்று திகழ்வதாக மெக்கபே நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர் மற்றும் சிறுமியரின் விகிதம் 83 சதவீதமாகும். சர்வதேச அளவின்படி 76%-ஐ விட அதிகமாகும். இதன் காரணமாக ஆன்லைன் மூலமாக நிகழும் பாதிப்புகளுக்கு அபாயம் அதிகமாக உள்ளது. சைபர் குற்றங்களுக்கு தள்ளப்படுகிறார்கள் சிறுவர், சிறுமியரின் விகிதம் 22 சதவீதமாக உள்ளது. இது சர்வதேச அளவில் 17 சதவீதமாகும்.
சர்வதேச அளவில் தங்கள் குழந்தைகள் ஆன்லைன் பயன்படுத்துவதை கண்காணிப்பது அவசியம் என்பதை 90 சதவீத பெற்றோர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் 56 சதவீத பெற்றோர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் சங்கேத வார்த்தை பயன்படுத்தி, குழந்தைகள் தங்களது ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை தடுத்துள்ளனர். 42 சதவீதம் குழந்தைகளின் ஸ்மார்ட்போனுக்கு பெற்றோர்களே சங்கேத வார்த்தையைப் பயன்படுத்தி பாதுகாத்துள்ளனர். இருப்பினும் ஆன்லைன் சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்க பெற்றோர்களை எதிர்நோக்கும் சிறுவர், சிறுமியரின் எண்ணிக்கை 72%-மாக உள்ளது.
ஆன்லைன் மூலமான பாதக அம்சங்களை எதிர்கொள்வதில் இந்தியக் குழந்தைகளின் விகிதம் மிக அதிகமாகும் என்று மெக்கபே நிறுவன துணைத் தலைவர் சச்சின்புரி தெரிவித்துள்ளார்.