சித்த மருத்துவர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருப்பதற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் கூறியிருப்பதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் சித்த மருத்துவ நல வாரியம் அமைக்க வேண்டும் என்று அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் தொடர்ந்து வேண்டுகோள்விடுத்து மனு கொடுக்கப்பட்டது.
அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் சித்த மருத்துவ நல வாரியம் அமைத்து பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்று எங்களது சங்கத்திற்ககு பதில் வந்தது. ஆனால் இறுதி வரை சித்த மருத்துவர் நல வாரியம் அமைக்கப்படவில்லை.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தொடர்ந்து சித்த மருத்துவர் நல வாரியத்தை மீண்டும் தொடங்கும்படி மனு கொடுத்து வருகின்றோம்.