சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா
காவல்துறையின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
உலகப் பிரசித்திப் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் திருவிழா நடைபெறும்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் என்றாலே
திருச்சி மாவட்டம் முழுவதுமே விழாக்கோலத்தில் காணப்படும்.
உலகப் பிரசித்திப் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் திருவிழா நடைபெறும். பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பு கொண்டவை. இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 9 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் பகலில் மூலவர் மற்றும் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், மண்டகப்படிகள், இரவு வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடைபெற்றது.
இந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் மிதுன லக்கினத்தில் தேர்வடம் பிடிக்கப்பட்டது.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன. அத்துடன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வெகுவாக கலந்து கலந்துகொண்டு சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தரிசனம் செய்தனர். இதனால் உன் வழக்கத்திற்கும் அதிகமான பக்தர்களின் கூட்டம் கடல் அலைகள் போல் காட்சியளித்தது, காவல்துறையினர் மிகவும் எச்சரிக்கையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்து தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக செயல்பட்டனர்.
பக்தர்கள், உள்ளூர் மக்கள் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வசதியாக திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருச்சி
மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலிருந்தும் திருச்சி மற்றும் சமயபுரத்திற்கு சிறப்பு விழா பஸ்கள் இயக்கப்பட்டு இருந்த நிலையில். வாகனப்போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சமயபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா மாலை 4 மணி அளவில் நிலை அருகே வந்தபோது காவல்துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்து நிலையில் நிறுத்தி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.