காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் திருச்சியில் திடீர் தற்கொலை

0

திருச்சி துவாக்குடி வாளவந்தான்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்.
டிரைவரான இவர் கீர்த்தனா(வயது 21) என்பவரை கடந்த 2 வருடங்களுக்கு காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுவரை குழந்தை இல்லை. இது கீர்த்தனாவுக்கு பெரும் கவலையாக மாறியது. அதைத்தொடர்ந்து தனது கவலையை மறப்பதற்காக கீர்த்தனா வேலைக்கு செல்வதற்கு முடிவு எடுத்துள்ளார். இது பற்றி தனது கணவரிடம் கூறிய போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் அவர் வெளியே சென்று விட்டநிலையில். கீர்த்தனா அருகாமையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று தாயின் சேலையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக கீர்த்தனாவின் தாய் ராணி துவாக்குடி போலீஸ் புகார் செய்துள்ளார், இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்