ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி ரூ 1000 வழங்க வேண்டும்

0



தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க திருச்சி மாவட்ட முதல் மாநாடு சனிக்கிழமை அன்று மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடந்தது.
மாநாட்டிற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் செந்தமிழ்செல்வன் வரவேற்றார். சையது சுல்தான் மக்தும் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சங்க கௌரவ தலைவர் பரமேஸ்வரன் துவக்கவுரையாற்றினார். வேலை அறிக்கையை செயலாளர் ராமதாசு வாசித்தார். சங்க மாநில துணைத்தலைவர் ராஜ்மோகன், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிராஜூதீன், டிஎன்ஆர்டிஓஏ மாநில செயலாளர் பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நீண்டகாலமாக ஓய்வூதியர்களின் நிலுவையிலுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யக்கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். 70வயது மூத்த ஓய்வூதியர்களுக்கு 10சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி ரூ 1000 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை முன்மொழிந்து தணிக்கையாளர் தௌலத் ஹ_சைன்கான் பேசினார்.
மாநாட்டில் தலைவராக டி.வி.மனோகரன், செயலாளராக ஆர்.ராமதாசு, பொருளாளராக ஆர்.மாணிக்கம் உள்பட 11 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநில துணைத்தலைவர் முருகேசன் பேசினார். மாநில தலைவர் ராமமூர்த்தி நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட இணைசெயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்