நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி சார்பாக, கார்த்திக் வைத்திய சாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இலவச புடவைகள், சத்து மருந்துகள், சளி மருந்துகள், கபசுர குடிநீர், உணவு பொட்டலங்களை சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே எஸ் சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா பாண்டியன் ஆகியோர் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் டாக்டர் கதிரவன், வனஜா, சுசீலா, ராமு, ஜெனட், டாக்டர் ரஃபி அகமது,டாக்டர் மதி குமார், டாக்டர் கணேசன், டாக்டர் சகுந்தலா சந்தானகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.