திருச்சியில் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் தேர்திருவிழா நடைபெற்றது

0

திருச்சியில் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் தேர்திருவிழா நடைபெற்றது.

Bismi

புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 29.08.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நவநாள் திருப்பலி நடைபெற்று வந்தது. பெருவிழாவின் இறுதியாக தேர்திருவிழா நடைபெற்றது.
தேர்பவனிக்கு முன்னதாக சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது.


திருப்பலியானது, இறைவார்த்தை சபையின் ஹைதராபாத்-தமிழ்நாடு மறைமாநில அதிபர் அருள்பணி. சாந்துராஜா (இறை வார்த்தை சபை) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருப்பலிக்குப்பின் தேர் மந்திரிக்கப்பட்டு பவனி தொடங்கியது. இந்த நிகழ்வில் திருக்கொடி இறக்கப்பட்டு நற்கருணை ஆராதனையோடு விழா நிறைவுபெற்றது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்