குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

0

தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலத்தில் மே மாத இறுதியில் சீசன் தற்போது துவங்கியுள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழையும், கன மழையும் பெய்து வருவதால், அவ்வப்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

Bismi

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றால அருவி, பிரதான அருவி ஆகியவற்றில் அதிகப்படியான தண்ணீர் வரத்து இருக்கிறது.

இதையடுத்து குற்றாலத்திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. சாரல் மழையோடு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தண்ணீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக சிறு கற்கள் மணல் என அருவிகளில்  விழத் தொடங்கியுள்ளது .

இதன் காரணமாக பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அருவிகளில் தண்னீர் குறையும்போது மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்