திருச்சியில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை- போலீசார் விசாரணை
திருச்சியில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை- போலீசார் விசாரணை
திருச்சி பட்டாபிராமன் தெரு பாலன் நகரை சேர்ந்தவர் சந்துரு(26). இவரது தந்தை பெயிண்டர் ஆக பணியாற்றி வருகிறார். சந்துரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு உழவர் சந்தை அருகே வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் இளைஞரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
சம்பவம் அறிந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் பின்னர் திருச்சி வடக்கு காவல் துணை ஆணையர் செந்தில்குமார் கொலை நடந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தினால் ஏற்பட்ட முதல் என கூறப்படுகிறது.
கொலை செய்து விட்டு தப்பி ஓடிய ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருச்சியில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.





Comments are closed.