ஆல் இந்தியா ஹேர் அண்ட் பியூட்டி அசோசியேசன் சார்பில் சென்னையில் உலக சாதனை நிகழ்ச்சி!

ஆல் இந்தியா ஹேர் அண்ட் பியூட்டி அசோசியேஷன் சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், விழிப்புணர்வுக்காகவும் உலக சாதனை நிகழ்ச்சி வரும் 7 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி அண்ணாமலை நகரில் இன்று நடைபெற்றது. இதில் அசோசியேஷன் செயலாளர் சுபா பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்….

- Advertisement -

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், விழிப்புணர்வுக்காகவும் சென்னையில் விங்ஸ் கண்வெண்ஷன் சென்டர் பகுதியில் வரும் ஏழாம் தேதி தமிழ்நாடு அளவிலான உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் “செல்ப் குரூமிங்” மற்றும் “சாரி ட்ராப்பிங்” ஆகிய நிகழ்வுகள் உலக சாதனையாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அழகு கலை நிபுணர்களுக்கு 5 லட்சம் மதிப்பிலான நல வாரியத் திட்டம், சிறு குறு தொழிலுக்கான முன்பதிவு மற்றும் நிதி உதவி திட்டம், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருந்து பெண்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்