- Advertisement -

டிசம்பர் 15ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை- உதயநிதி ஸ்டாலின்

- Advertisement -

டிசம்பர் 15ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை- உதயநிதி ஸ்டாலின்

திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கான ஒன்றிய-நகர பகுதி கிளை வார்டு மற்றும் பாகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞரணி நிர்வாகிகளுக்கான அறிமுக கூட்டம் நேற்று (நவம்பர் 24) நடைபெற்றது.திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 294 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.தொடர்ந்து பல கூட்டங்களில் பேசி வருவதால் தொண்டை கட்டி உள்ளது. மூன்று நாட்களுக்கு பேசக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தாலும் உங்களிடம் பேச வந்துள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். இந்தியாவிலேயே நீர் நிலைகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டம் பாலபுரம் ஊராட்சி மத்திய அரசின் விருது வாங்கி உள்ளது. அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதே திருவள்ளூர் மாவட்டத்தில் 65 ஆயிரம் பேருக்கு முதல்வர் வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது. தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் கலைஞர் ஆட்சியில்தான் ரேசன்கடை திறக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுதேடி ரேசன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. குடிசை வீடுகளை கான் கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். கலைஞர் கனவு இல்லம் வாயிலாக ஏராளமானோர் வீடு பெற்று உள்ளனர். மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்ல வீட்டை வழங்கியவர் முதலமைச்சர். மாணவி தான்யாவின் இல்லத்திற்கு சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தவர் முதலமைச்சர். தான்யாக்கள், பிரேமாக்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வர கூடிய ஆட்சி தான் முதல்வர் ஆட்சி.
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் தொகுதிகளில் அமைக்கப்படும் மினி ஸ்டேடியங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும். தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடியல் பயணம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திமுகவுக்கு மட்டும்தான் இளைஞரணிக்கு என்றே தனிவரலாறு உண்டு. பல கட்சிகள் பூத் கமிட்டி அமைக்கவே சிரமப்பட்டு கொண்டிருக்கின்ற வேளையில் திமுக இளைஞரணி மட்டும்தான் பூத்துக்கு ஒரு அமைப்பாளரை நியமித்திருக்கிறது.இது மிகப் பெரிய ஒரு சாதனை.

இளைஞரணியில் கொடுத்துள்ள பொறுப்பு, நிச்சயமாக பதவி கிடையாது. அது பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். இளைஞரணி நிர்வாகிகள் சரியாக உழைத்தால், அவர்களுக்கான அங்கீகாரத்தை திமுக தலைவர் நிச்சயம் கொடுப்பார்.இளைஞரணி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் நீங்கள் வசிக்கும் பகுதியில் 50 வாக்காளர்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எப்படி களத்தில் சிறப்பாக செயல்படுகிறீர்களோ, அதே மாதிரி சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்படவேண்டும்.

Vagai
Bismi

திமுகவை பாராட்டுகிற செய்திகள் மட்டுமல்ல, திமுக மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் சேர்ந்து படியுங்கள். அதற்கான பதில்களையும் தேடுங்கள். இன்று பல இளைஞர்கள் எந்த இயக்கத்தில் சேருவது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இளைஞரணியினர் மாற்றுக்கட்சி இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் பேசி, திமுகவுக்கு அதிகமான இளைஞர்களை நாம் அழைத்து வரவேண்டும். இதை நான் வெறும் தேர்தலுக்காக மட்டும் சொல்லவில்லை. தேர்தலுக்குப் பிறகும், எதிர்காலத்தில் மிகப்பெரிய பலமாக இளைஞர் பட்டாளம் இருக்கவேண்டும். மகளிர் சுய உதவி குழுக் களை சேர்ந்த பெண்களுக்கு ஐ.டி.கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவி குழு பெண்கள் தயாரிக்கும் பொருட்களில் 25 கிலோ வரை அரசு பஸ்களில் 100 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி எடுத்து செல்லலாம். இதனால் அவர்களின் லாபம் அதிகரிக்கும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், விடுபட்ட மற்றும் புதிதாக விண்ணப்பித்த தகுதியுள்ள பெண்களுக்கு டிசம்பர் 15, 2025 முதல் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார் . கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்த செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கப்பட்டு, இதுவரை சுமார் 1.14 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை சுமார் ரூ.30,000 கோடி மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை சுமார் ரூ.26,000 வழங்கப்பட்டுள்ளது.இந்தசூழலில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் மூலம் சுமார் 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் நவம்பர் 30, 2025-க்குள் ஆய்வு செய்து, தகுதியுள்ள பயனாளிகளின் பட்டியல் இறுதி செய்யப்படும்.

எனவேதான், தகுதியான புதிய பயனாளிகளுக்கு டிசம்பர் 15, 2025 முதல் மாதம்தோறும் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்