திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளையின் தரணி ஆளும் பெண்கள் மகளிர் தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டம்!

- Advertisement -

திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளையின் தரணி ஆளும் பெண்கள் தொழில் முனைவோர் மகளிர் குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவரும் சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான ஆர்.கோவிந்தராஜ், ஓய்வு பெற்ற ரயில்வேதுறை அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான ராதாகிருஷ்ணன், தமிழநாடு நுகர்வோர் பெடரேஷன் அமைப்பின் தலைவரும் சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான சிவசங்கர் சேகரன், தேசிய மாநில விருது பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்கள் பெண்கள் பல்வேறு போராட்டங்களை கடந்து தங்களது தனி திறமைகளை குடும்பத்தில் இந்த சமுதாயத்தில் வெளி கொண்டு வந்து சாதிப்பது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி எப்படி பொருட்களை விற்பனை செய்வது, நுகர்வோருக்கு எப்படி தரமான பொருட்களை குறைந்த விலையில் தருவது, தங்களது தொழில்களை மேம்படுத்த எப்படி வங்கிகளை அனுகி கடன் பெறுவது, தொழில் நுட்பத்தை சரியாக பயிற்சி எடுத்து எப்படி பயன்படுத்துவது, இந்த சமூதாயதத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் விமர்சனங்களை எப்படி கையாள்வது, தனி திறமைகளை எப்படி மேம்படுத்தி வளர்த்து கொள்வது, பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்கள் என்ன என்பது குறித்து விளக்கி பேசினர்.

- Advertisement -

இந்நிகழ்வில் கலந்து கொண்ட திருச்சி, காரைக்குடி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மகளிர் தொழில் முனைவோர் தாங்கள் தயாரிக்கும் கைவினை பொருட்கள், உணவு தயாரிப்பு, சிறுதானிய பொருட்கள் உற்பத்தி, அழுகுகலை, துணி விற்பனை போன்ற பல பொருட்களின் சிறப்பு குறித்து விளக்கினர். மேலும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களிடம் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றனர். இந்நிகழ்விற்க்கான ஏற்பாடுகளை தாய் நேசம் அறக்கட்டளையின் தரணி ஆளும் பெண்கள் மகளிர் குழுவின் நிறுவனரும், தலைவருமான ஹெப்சி சத்தியராக்கினி, ஒருங்கிணைப்பாளர் சுதா சுரேஷ் மற்றும் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்