யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 2026 ல் திமுகவிற்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் – காதர் மொய்தீன் பேச்சு.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 2026 ல் திமுகவிற்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் – காதர் மொய்தீன் பேச்சு.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிறது. எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, மமக, மஜக, முஸ்லீம் லீக், மநீம, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். திமுக திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி எம்.பி துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய துரை வைகோ,
எஸ்.ஐ.ஆர் என்பது வாக்கு திருத்தத்திற்காக அல்ல வாக்கு திருட்டுக்காகவே கொண்டு வரப்பட்டது
எஸ்.ஐ.ஆரை எதிர்த்து மதிமுக சார்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
காதர் மொய்தீன் பேசுகையில்,

எஸ்.ஐ.ஆர் வந்த பிறகு பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். அது எந்த அடிப்படையில் நீக்கினார்கள் என்பதே தெரியவில்லை.
இந்தியாவிற்கு வழிக்காட்டும் தமிழக முதல்வர் எஸ்.ஐ.ஆர் விவகாரத்திலும் இந்தியாவிற்கே வழிக்காட்டி வருகிறார்.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 2026 ல் திமுகவிற்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும்.
தமிழகத்தில் உள்ள 8000 முஸ்லீம் ஜமாத்துக்கள் திமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டார்கள். ஜமாத்தில் இருப்பவர்கள் வெவ்வேறு கட்சிகளிலும் இருந்தாலும் தேர்தலில் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள்.
பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஸ்டாலினை மீண்டும் தமிழக முதல்வராக்குவார்கள். அதை நூறு முறை அல்ல ஆயிரம் முறை கூறுவோம் இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் எஸ்.ஐ.ஆரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கஙகள் எழுப்பப்பட்டது.


Comments are closed.