என்னதான் ஆச்சு மேல வாளாடி மேம்பாலத்திற்கு பள்ளமும், குழியும் சூழ்ந்து இருக்கிறது பொதுமக்கள் எப்படித்தான் கடந்து செல்வது..?
என்னதான் ஆச்சு மேல வாளாடி மேம்பாலத்திற்கு பள்ளமும், குழியும் சூழ்ந்து இருக்கிறது பொதுமக்கள் எப்படித்தான் கடந்து செல்வது..?

திருச்சி நம்பர் 1 டோல்கேட் வழியாக லால்குடி செல்லும் வழியில் மேல வாளாடி பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது, மேம்பாலத்தின் வழியாக அரியலூர்,ஜெயங்கொண்டம், தஞ்சாவூர்,கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லக்கூடிய வழித்தடங்கள், ஓய்வில்லாமல் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய நிலையில் உள்ளது, இந்த சாலையில் மேலவாளாடி மேம்பாலம் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது, இந்த மேம்பாலத்தின் துவக்க முதல் முடிவு வரை ஜாயிண்ட் உள்ள இடங்களில் கான்கிரீட் சேதமடைந்து இரும்பு வெளியே தெரியும் அளவிற்கு சேதம் அடைந்துள்ளது, அந்த பள்ளத்தால் தொடர் விபத்துகளும் வாகனங்கள் பழுதும் ஏற்படுகிறது, மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் மேலும் கர்பிணி பெண்கள் கடந்து செல்லும் பொழுது கரு சிதைவும் ஏற்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

அத்துடன் இந்த மேம்பாலத்தின் வழியாகத்தான் அமைச்சர் கே என் நேரு அவர்கள் பயணம் செய்து வருகிறார், இருந்தபோதிலும் சீரமைப்பு பணியானது நடைபெறவில்லை, எனவே மேளவாளாடி மேம்பாலத்தில் உள்ள பள்ளத்தினை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சீர் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தங்களது சமூக வலைதளத்தில் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இந்த டேமேஜ் நேற்று இன்று ஏற்படவில்லை கடந்த 6,7 வருடங்களாகவே இந்த பாலம் இப்படிதான் இருக்கிறது என்கிறார்கள், மேம்பாலத்தில் இருக்கும் பள்ளத்தை கடக்கும் அதிகார வர்க்கம் அதிகாரிகள் அனைவரும் இதை கடந்து தான் செல்கிறார்கள், சீர் செய்வதற்கு முன்வரவில்லை என்றும் கூறுகிறார்கள்,

மேம்பாலத்தில் இருப்பது சிறிய பள்ளம் தான் என்று அனைவரும் கடந்து போகிறார்கள் ஆனால் இதில் இருக்கும் ஆபத்து வேறு விதமானது சிறிய ரக வாகனங்கள் இந்த பாலத்தை கடக்கும் பொழுது பள்ளத்தை அறிந்து மெதுவாக கடந்து செல்கின்றனர், அதே சமயத்தில் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இந்த பாலத்தில் வேகமாக கடந்து செல்லும் பொழுது அதிர்வு அதிர்வு ஏற்படுகிறது, அப்பொழுது இருசக்கர வாகனம் மற்றும் சிறிய வாகனங்கள் மிகவும் தடுமாறுகின்றனர். இரவு நேரத்தில் பாலத்தை கடந்து செல்வதற்கு மின் கம்பங்கள் அமைத்திருந்தாலும் அதில் பல பல்புகள் எரியாமல் இருப்பதால் வெளிச்சம் இல்லாமல் போகிறது அதனால் மிகவும் சிரமப்பட்டு கடந்த செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இந்த மேம்பாலத்தை சீர் செய்யும் அவசியம் உள்ள நிலையில் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?
தேர்தல் நேரத்தில் அப்பகுதியில் உள்ள மக்களின் வாக்குகள் தேவைப்படுகிறது ஆனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதில்லை ஏன்?
நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலத்தில் இருக்கும் பள்ளத்தினை சீர் செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
பல்வேறு கேள்விகள் சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள், அரசு அலுவலகம் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கோரிக்கை நீங்க அப்படியே முன் வைக்கிறார்கள், இருந்தபோதிலும் இதனை சீர் செய்ய அரசு அதிகாரிகள் முன்வரவில்லை அதனால் பொறுத்தது போதும் பொங்கி எழு வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர் மேலவளாடி மேம்பாலத்தை கடந்து செல்லும் பொழுது வழிமறித்து பாலத்தில் இருக்கும் பள்ளத்தை பற்றியும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் விளக்கம் அளித்தால் தான் இதனை உடனடியாக சீர் செய்வார்கள் என்றும் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பரவலாக பேசி வருவதாக கூறப்படுகிறது.
லால்குடி செய்தியாளர்
கார்த்திகேயன்


Comments are closed.