ஸ்டாலின் அரசின் சாதனை என்ன ? -இபிஎஸ் குற்றச்சாட்டு.

திமுக அரசு கும்பகர்ண தூக்கம்!

ஸ்டாலின் அரசின் சாதனை என்ன ? -இபிஎஸ் குற்றச்சாட்டு.

திமுக அரசு கும்பகர்ண தூக்கம்!

சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யம் ஆகிவிட்டது, அதை தடுக்காமல் திமுக அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

Bismi

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது;

சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

திமுக ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

தலைநகரின் பிரதான சாலைகளில் ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது என்பது, இந்த நொடி, இந்த இடம் என எங்கும், எப்போதும் பாதுகாப்பு மக்களுக்கு இல்லை என்பதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது.ரவுடியிசத்தைக் கண்டு மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத ‘ஸ்டாலின் அரசின் சாதனை’ என்று இந்த முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம்.தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு இபிஎஸ் தமது பதிவில் கூறியுள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்