டாக்டர் அம்பேத்கரை எந்நாளும் நினைவில் போற்றுவோம் – டிடிவி!
டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சிற்பியும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்பதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவருமான சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவுதினம் இன்று. பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்ற கருத்தை எடுத்துரைத்து, தீண்டாமையை அகற்ற பாடுபட்டதோடு, சமதர்ம சமூக நீதித் தத்துவங்களை வேரூன்றச் செய்த டாக்டர் அம்பேத்கர் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.