திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!
திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது….
இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நவ. 16, 17, நவ.23, 24 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறுகிறது.
இதன்படி திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி ஆகிய 4 கோட்டாட்சியரகங்கள், திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூா், மணப்பாறை, துறையூா், தொட்டியம், மருங்காபுரி ஆகிய 11 வட்டாட்சியரகங்களிலும் முகாம் நடைபெறும்.
மேலும் மாநகராட்சிக்குள்பட்ட மாநகராட்சி ஆணையரகம், மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 2,543 வாக்குச்சாவடிகளிலும் இந்த முகாம்கள் நடைபெறும். தகுதியான வாக்காளா்கள் இதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.