- Advertisement -

கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசை

0

- Advertisement -

திருக்கண்ணங்குடி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

Bismi

நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளிக்கு தேவையான பொருள்களை கிராம மக்கள் சார்பாக வழங்கபடுவது வழக்கம்.இதே போல் இந்த ஆண்டுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இப்பள்ளிக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் சார்பில் வாங்கப்பட்டு இன்று பள்ளிக்கு வழங்கப்பட்டது, பள்ளியில் இருந்து மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது, இதில் பள்ளிக்கு தேவையான இருக்கைகள், எல்இடி டிவி,சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் ஆர்வோ வாட்டர் மெசின், பீரோ, குடம், பாய்கள், மின் விசிறிகள், இருக்கைகள், சாக்பீஸ், உள்ளிட்ட 1லட்சம் மதிப்பீலான பொருள்களை தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் மற்றும்,பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்