விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி-மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி

விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி-மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி

விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி, திமுக வை விமர்சிக்கும் அளவிற்கு பா.ஜ.க வை விமர்சனம் செய்யாதது அவர் பா.ஜ.க வை பார்த்து அச்சப்படுகிறாரா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது – மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பெயரை மாற்றி இருப்பது கண்டனத்திற்குரியது.

ஒன்றிய அரசு சர்வாதிகாரத்தனத்தோடு புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

காந்தி மீது அவர்களுக்கு கோபம் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

Bismi

புதிய மசோதாவில் 60 சதவீதம் நிதி தான் ஒதுக்கப்படும் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.125 நாட்கள் வேலை நாட்கள் உயர்த்தப்படும் என கூறி 60 நாட்கள் அறிவிப்பின்றி இடைநிறுத்தலாம் என கூறுவது இத்திட்டத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கை தான்.முக்கிய மசோதா தாக்கல் செய்யும் போது பிரதமர் அவையில் இல்லாமல் வெளிநாடு சென்றிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டனத்திற்குரியது.எஸ்.ஐ.ஆர் என்பது என்.ஆர்.சியின் நகல். பீகாரில் நடைபெற்றது போலவே குளறுபடிகள் நடந்துள்ளது.முழுமையாக விவரங்கள் வெளியே வந்த பின் தான் அதிர்வலைகள் தெரிய வரும்.

எஸ்.ஐ.ஆர் நடைமுறை தேவையில்லை என்பது எங்கள் நிலைப்பாடு.

திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். திமுக கூட்டணியில் எத்தனை தொகுதி கேட்பது உள்ளிட்டவை குறித்தும் தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தலைமை நிர்வாக குழு கூடி முடிவெடுக்கும்.திமுக தீய சக்தி த.வெ.க தூய சக்தி என விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல அது துடுக்கு மொழி.

திமுக வை தாக்கும் அளவிற்கு பா.ஜ.க மீது அவர் எந்த விமர்சனமும் செய்யவில்லை. அவர் ஏன் பா.ஜ.க வை பார்த்து அச்சப்படுகிறார் என தெரியவில்லை.

நடிகர் விஜய் முதலில் பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்