விஜய் ஒரு காலத்திலும் எம்ஜிஆர் ஆக முடியாது-அமைச்சர் எஸ். ரகுபதி  

விஜய் ஒரு காலத்திலும் எம்ஜிஆர் ஆக முடியாது-அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை அடுத்த பொம்மாடி மலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி.

அமைச்சர் எஸ். ரகுபதி  செய்தியாளர்களிடம் கூறியாவது :

Bismi

எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு இருக்கிறார்கள் .தமிழ்நாடு முழுவதும் 97 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.திராவிட முன்னேற்ற கழகம் எஸ்ஐஆர் பணி 10 நாட்களுக்குள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து உண்மையிலேயே விடுபட்டுருக்கிறார்களா! இவர்கள் வேண்டுமென்றே விட்டிருக்கிறார்களா!

என்பதை எல்லாம் நிச்சயமாக கண்டுபிடித்து சொல்லுவோம்.எங்களுடைய ஒவ்வொரு பிஎல்ஏ2வும் ,பிடிஏயும், பிஎல்சியும் இணைந்து ஒவ்வொரு பூத்தாக சென்று அங்கு இருக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை 10 நாட்களுக்குள்ளே சரிபார்த்து விடுவார்கள்.

திமுக தீயசக்தி தூய சக்தி … இதை பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டோம் .எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. அவருக்கு மக்கள் சக்தியை பற்றி தெரியாது.சினிமா வசனத்தில் தீய சக்தி தூய சக்தி என்று பேசியிருக்கிறார். நாங்கள் மக்கள் சக்தியை நம்புகின்றவர்கள். எங்களிடத்திலே மக்கள் சக்தி இருக்கிறது.

முதலமைச்சர் சினிமா டயலாக் தான் பேசுகிறார் . நான் பேசினால் சினிமா டயலாக்னு சொல்லுகிறார்கள் . முதலமைச்சர் பேசுறது என்ன சிலப்பதிகார டயலாக்கா? விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது, எழுதி கொடுப்பதை வாசிக்க மட்டும்தான் அவருக்கு தெரியும்.திராவிட மாடல் ஆட்சியை திராவிட கலாச்சாரத்தையோ தமிழ்நாட்டிலிருந்து பிரிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. எந்த காலத்திலும் விஜய் நினைப்பது நடக்காது.எம்ஜிஆரையும் விஜய்யும் ஒப்பிடவே முடியாது. விஜய் ஒரு காலத்திலும் எம்ஜிஆர் ஆக முடியாது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொள்கை வேறு கூட்டணி வேறு எதற்காக்கவும் நங்கள் கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம் .அவருக்கு கொள்கையும் இல்லை கூட்டணி என்றுதான் நம்பி இருக்கிறார் . கொள்கை வேறு கூட்டணி வேறு என்று சொல்லுகின்ற தகுதி பழனிச்சாமி கிடையாது. பிஜேபி யில் அடிமையாக இருக்கிறார். இவ்வாறு ரகுபதி கூறினார் .

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்