- Advertisement -

“விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” – அதிமுகவினரின் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்!

- Advertisement -

“விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” – அதிமுகவினரின் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்!

 

“கமிஷன், கலெக்க்ஷன், கரப்ஷன்” என ஊழலில் ஊறித் திளைத்துள்ள திமுக ஆட்சியில், மின்சாரக் கட்டணம், சொத்து வரி மற்றும் பல்வேறு வரிச் சுமையாலும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். அதை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளும் ‘விடியா ஆட்சி – உங்கள் வீட்டு ‘பில்’லே சாட்சி’ என்ற பூத் வாரியாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை, கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.

 

Bismi

இதன்படி, அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில், ‘அஇஅதிமுக கனெக்ட்’ (AIADMK Connect) செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக, எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலம், தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலம் ஆகியவற்றை ஒப்பிட்டு, கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த திமுக ஆட்சி கொடுத்திருக்கும் பனிஷ்மென்ட் பில்-ஐ, இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் பணி திருச்சி மாநகரக்குட்பட்ட பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

Vagai

இதற்காக திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் கலந்துகொண்டு, புத்தூர் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கு, கையடக்க பிரிண்டர்கள் வழங்கி, AIADMK கனெக்ட் செயலியை இயக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜசேகர், புத்தூர் பகுதி செயலாளர் பூபதி, ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட் பிரபு, கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்