வெற்றி கல்வி குழுமத்தின் தாளாளர் தங்கமணி மறைவிற்கு புகழ் வணக்கம்!

வெற்றி கல்வி குழுமத்தின் தாளாளர் தங்கமணி மறைவிற்கு புகழ் வணக்கம்!

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மணப்பாறை நகராட்சி உறுப்பினர் வெற்றி கல்வி குழுமத்தின் தாளாளர் தங்கமணி (வயது54) 24.8.25 அன்று காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைமுறை குடும்பத்தில் வி.ஜி.தங்கவேல் லட்சுமி தம்பதியினர்க்கு ஐந்தாவது மகனாக பிறந்தவர்

த.தங்கமணி. இவருடன்

Bismi

த. இந்திரஜித், த. ஜீவானந்தம்,

த. கல்யாணசுந்தரம் என்று மூன்று சகோதரர்களும், த.பிரேமா என்ற சகோதரியும் உள்ளனர்.

த. இந்திரஜித் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க TUJ மாநில ஒருங்கிணைப்பாளர் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவராக பொறுப்பு வகித்து செயல்பட்டு வருகிறார்.

த. தங்கமணி வாழ்விணையர் மனோன்மணி மணப்பாறை நகராட்சி உறுப்பினராக உள்ளார். மணப்பாறை நகராட்சியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு பொதுமக்கள் நன்மதிப்பைப் பெற்றவர். வெற்றிக்கல்வி குழுமத்தின் மூலம் அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ஜீவா அறக்கட்டளை அமைத்து பல்வேறு பணிகளை செய்தவர்.தோழர் தங்கமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அண்ணாரின் மறைவிற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க (TUJ)தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தொலைபேசி மூலம் இரங்கலை தெரிவித்துக் கொண்டார். தேசிய செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.சுப்பையா, திருச்சி மாவட்ட தலைவர் பாலாஜி, செயலர் விஜயகுமார், பொருளாளர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வெற்றி கல்வி குழும தாளாளர் தோழர் தங்கமணி உருவப்படத்திற்கு மலர் தூவி மலர் மாலை அணிவித்து புகழ் வணக்கத்தினை செலுத்தினர். மறைந்த தோழர் தங்கமணி நினைவுகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அவரை இழந்து வாடும் வாழ்வினையர் மனோன்மணி, சகோதரர் தோழர் இந்திரஜித் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்