- Advertisement -

பாஜக உடன் மதிமுக கூட்டணி என்று நாகரீகம் இல்லாமல் செய்தி வெளியிடுகின்றனர் – திருச்சியில் வைகோ பேட்டி

- Advertisement -

பாஜக உடன் மதிமுக கூட்டணி என்று நாகரீகம் இல்லாமல் செய்தி வெளியிடுகின்றனர் – திருச்சியில் வைகோ பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,..

மூன்றரை ஆண்டுகளாக ரஷ்யா உக்கிரைன் இடையே போர் நடக்கிறது.
ரஷ்யாவை காப்பாற்றிய பங்கு உக்கிரேனுக்கு உள்ளது. ஆனால் தற்போது உக்கிரைன் அளிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Vagai

ஆர்.எஸ்.எஸ், பாஜக இந்திய நாட்டை மதவாத நாடாக மாற்ற செயல்பட்டு வருகிறது. RSS வழியில் ஆட்சி நடக்கும் என சிலர் பேசுகிறார்கள். சமீபத்தில் நடந்த மாநாட்டில் இயற்றப்பட்ட பிரகடனத்தில்
இந்தியா என்று அழைக்க கூடாது. பாரத் என அழைக்க வேண்டும் என கூறுகிறார்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு வாக்கு உரிமை கிடையாது. டெல்லி தலை நகரம் கிடையாது என்ற பிரகடனத்தை நிறைவேற்றி உள்ளனர்.

Bismi

இந்தியை திணிக்க கூடாது என்று நாடாளுமன்றத்தில் நான் எச்சரித்து உள்ளேன்.

மழைக்கு முன்பு கூடும்
கருமேகங்கள் போல திடீர் கட்சிகள் உருவாகின்றன. அரசியல் கட்சிகள் அறிக்கை தந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்கள் கூட்டணி வைப்பது அவர்கள் முடிவு. நாங்கள் பெரியார் அண்ணா, வழியில் கட்சி நடத்துகிறோம்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தனி பெரும்பான்மை ஆட்சி அமைக்கும் என நான் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆனால்
பாஜக உடன் மதிமுக கூட்டணி என்று நாகரீகம் இல்லாமல் செய்தி வெளியிடுகின்றனர்.

அமலாக்கத்துறை சோதனை அரசியல் நோக்கத்தோடு அச்சுறுத்தல், மிரட்டல் போன்றவற்றிற்கு அவர்கள் பயன்படுத்துகின்றனர். இன்று சட்டமன்ற அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து சோதனை செய்வதாக திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் என்பதை தொலைக்காட்சி வாயிலாக தெரிந்து கொண்டேன். மிரட்டுவதற்காக மட்டுமே பாஜக அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்துவதை கண்டிக்கிறேன் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்