- Advertisement -

வ.உ.சி நினைவு நாள் – திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

- Advertisement -

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர், ஜெ.சீனிவாசன் தலைமையில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்