- Advertisement -

திருச்சியில் நான்கு கிலோ மீட்டர் நடை பயணம் – மத்திய அமைச்சர் பங்கேற்பு!

- Advertisement -

இந்திய இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன், “ராமன் விளைவுகள்” கண்டுபிடித்ததை குறிக்கும் வகையில் மை பாரத் நேரு யுகேந்திரா சார்பில் நான்கு கிலோ மீட்டர் தூரம் மூன்றாயிரம் பேர் பங்கேற்கும் நடைபயணம் திருச்சியில் நடைபெற உள்ளது – மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்

திருச்சி நேரு யுவகேந்திரா மையத்தில் நேரு யுவகேந்திராவின் துணை இயக்குனர் நீலகண்டன், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில் ….

இந்திய திருநாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய தேசத் தலைவர்களின் பங்களிப்பினை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு தேசத் தலைவர்கள் பிறந்த இடங்களில் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Vagai
Bismi

அதன் ஒரு பகுதியாக இந்திய இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி இராமன் அவர்கள் “இராமன் விளைவுகள்” கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையில் மை பாரத் – நேரு யுவ கேந்திரா திருச்சி மாவட்ட நிர்வாகம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் அறிவு சார் நிறுவனங்களுடன் இணைந்து, வரும் 27.02.2025 அன்று தேசிய பள்ளி விளையாட்டு மைதானத்திலிருந்து சர்.சி.வி இராமன் பிறந்த இடமான திருவானைக்காவல் வரை 4 கி.மீ துாரம் மாபெரும் நடைபயணம் நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்வில் மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

அறிவியல் செயல்பாடுகளில் ஈடுபட இளையோரை ஊக்குவித்தல் மற்றும் அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள் குறித்து பரிசீலித்தல். சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல். வளர்ந்த பாரதம் எனும் இலக்கினை எட்ட, அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்த இளையோரை ஊக்குவித்தல். இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். இந்த நடைபயணத்தில் தேசியக் கொடி, பதாகைகள் மற்றும் சர்.சி.வி இராமன் அவர்களின் படங்களுடன் சுமார் 3000 இளையோர்கள் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்