ரோஸ்கர் மேளா திட்டத்தில் 115 பேர்களுக்கு பணி நியமன ஆணையை – மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி வழங்கினார். 

ரோஸ்கர் மேளா  திட்டத்தில் 115 பேர்களுக்கு பணி நியமன ஆணையை – மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி வழங்கினார்.

இந்தியாவில் வேலைவாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முத்ரா யோஜ்னா உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்திய இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக நாடு முழுவதும் இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த ரூ.12,000 கோடியில் ஸ்கில் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

Bismi

இந்நிலையில் ரோஸ்கர் மேளா என்ற திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், குடிமக்களின் நலனை உறுதி செய்யவும் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க முயற்சி செய்து வருகிறது.

 

இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் இன்று 17 வது ரோஸ்கர் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கலந்துக்கொண்டு மத்திய மண்டலத்தில் தபால் துறை, ரெயில்வே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், பெட்ரோலியம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பிற துறைகளில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 115 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி…

 

பல்வேறு துறைகளில் புதிதாக பணியாற்ற உள்ளவர்களுக்கு, பணி நியமன ஆணையை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் 40 இடங்களில் நடைபெற்று வருகிறது. சுமாராக 51 ஆயிரம் நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதிலிருந்தே நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமைத்துவம் சிறப்பு வாய்ந்தது என்று அனைவரும் அறிவோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் பாரத பிரதமர் மோடி அவர்களின் செயல் திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த 13 வருடங்களில் மட்டும் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்கும் திட்டம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணி நியமன ஆணை ஒருவரின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் அவரை சார்ந்த அனைவரும் வளர்ச்சி அடைவார்கள். இத்தகைய மகத்தான திட்டத்தை வழங்கிய நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்