திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 77 வது ஆண்டு விழா!
திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 77 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் பா.செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு (பொது மற்றும் தொழிற்கல்வி பிரிவுகளில்) தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தங்கப்பத்தக்கம் மற்றும் ரூ 500/- பணமும், இரண்டாம் இடத்தை பிடித்த மாணவிகளுக்கு வெள்ளிப்பதக்கமும் ரூ.500/- பணமும் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து அனைத்து பாடப்பிரிவுகளில் முதல் மற்றும் இரண்டாம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி செயலாளர் சரஸ்வதி வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் ஆண்டறிக்கையை தலைமையாசிரியர் நாகம்மை வாசித்தார். விழாவில் வார்டு கவுன்சிலர் மற்றும் பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முடிவில் பள்ளியின் செயலாளர் நன்றி கூறினார்.
Comments are closed.