- Advertisement -

திருச்சி செங்குளம் காலனி அருள்மிகு செல்வமுத்து விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா!

- Advertisement -

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் செங்குளம் காலனி அரசு அலுவலக குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்வமுத்து விநாயகர் ஆலயத்தின் ஜீர்ணோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி திருச்சி காவேரி ஆறு அம்மா மண்டப படித்துறையில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் மகா கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மாலை விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், பிரதான மூர்த்தி கலாகரஷனத்துடன் யாக கால பூஜைகள் நடைபெற்று வந்தது.

Vagai

Bismi

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை மகா கணபதி பூஜையுடன், இரண்டாம் கால யாக பூஜை, மண்டப பூஜை, யாத்ரா தானத்துடன் ஆலய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து அருள்மிகு செல்வமுத்து விநாயகர் ஆலய கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் செங்குளம் காலனி அரசு அலுவலக குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்து சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்