அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆஃப் இந்தியா (USI), 1974 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி புது டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் நிறுவப்பட்டது. இதன் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆசிரியர் விருதை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பெறப்பட்ட ஏராளமான பரிந்துரைகளில் இருந்து, திருச்சியில் உள்ள SRM TRP பொறியியல் கல்லூரியின் இயற்பியல் பேராசிரியரான டாக்டர் கே.சக்திபாண்டி, அவரது அப்ளைடு அல்ட்ராசோனிக்ஸில் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விருதை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற ICUMSAT-2024 (International Conference on Ultrasonic and Advanced Technology) மாநாட்டின் தொடக்க விழாவில், அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் மற்றும் முன்னாள் துணைவேந்தர், டாக்டர் ராஜா ராம் யாதவ் வழங்கினார்.
மேலும் SRM TRP இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் டாக்டர் ஆர். சிவகுமார் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் விருது பெற்ற டாக்டர் சக்திபாண்டியை வாழ்த்தி, அவரது அல்ட்ராசோனிக்ஸ் துறையின் முன்னேற்றத்திற்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் பெற்ற முக்கியமான சாதனைகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த விருதானது அல்ட்ராசோனிக்ஸ் மற்றும் பொருள் அறிவியல் துறைகளில் டாக்டர் சக்திபாண்டி மைல் கல்லாக இருந்து, எதிர்கால மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
Comments are closed.