திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் – வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் – வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


திருச்சி என்.எஸ்.பி சாலையில் தெப்பக்குளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு இருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டது அந்த பகுதியில் கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு மாற்று இடத்தில் கடை ஒதுக்கி தரப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் மாநகராட்சி சார்பில் ஒதுக்கப்படக்கூடிய இடம் பொதுமக்கள் அதிகம் வராத இடமாக உள்ளது இதனால் தங்களுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவே என்எஸ்பி சாலையிலேயே தங்களுக்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் அல்லது சிங்காரத்தோப்பு அருகே உள்ள யானை குளம் பகுதியில் தரை கடை அமைக்க இடம் ஒதுக்கி தரவேண்டும் என தரக்கடை வியாபாரிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

அந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று என் எஸ் பி ரோடு பகுதியில் தரைக்கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது சர்புதீன் என்கிற வியாபாரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த வியாபாரிகளும் போலீசாரும் அவரை தடுத்து நிறுத்தினர் இதனால் வந்து பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து அங்கு வந்த போலீசாரும் அதிகாரிகளும் இது குறித்து மாநகராட்சி அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என கூறினார் அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Comments are closed.