திருச்சி காவேரி மருத்துவ மனையில் 12 வயது சிறுவனுக்கு ஏபிஒ இணக்கமற்ற சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை
மரபணுக் கோளாறுகள் பிறப்பிலேயே சிறுநீரக இயல்பு பிறழ்வுகள் மற்றும் தன் எதிர்ப்பு நோய் ஆகியவை குழந்தைகள் மத்தியில் கடுமையான சிறுநீரக செயலிழப்பிற்கு முன்னணி காரணங்களாக இருக்கின்றன,
தமிழ்நாட்டில் திருச்சியில் ஒரு முன்னணி மருத்துவமனையாக திகழும் காவேரி மருத்துவமனை 12 வயதான ஒரு சிறுவனுக்கு ஏபிஓ இணக்கமற்ற சிறுநீரக உறுப்பு மற்றும் சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது,
இந்தியாவில் இத்தகைய அறுவை சிகிச்சை செயல்முறை ஒரு அரிதான நிகழ்வாகும் நீரழிவு சர்க்கரை நோய் மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவை சிறுநீரக செயலிழப்பிற்கான முக்கிய பங்களிப்பு காரணியாக இருக்கின்றன இந்நிலையில் உலகெங்கிலும் அதிக கவலையை உருவாக்கும் பெரும் பிரச்சனையாக சிறுநீரக செயலிழப்பு உருவெடுத்து இருக்கிறது,
இந்த புரட்சிகரமான சிகிச்சை பற்றி கதிர்வீச்சு சிகிச்சையில் துறையின் தலைவரும் முதுநிலை ஆலோசகரமான டாக்டர்.செந்தில் வேல்முருகன் கூறியதாவது மரபணு கோளாறு சிறுநீரகங்களை பாதித்திருப்பதன் காரணமாக ஒரு ஆண்டாக டயாலிசிஸ் சிகிச்சையை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயதான ஒரு சிறுவன் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருப்பதை எமது மருத்துவர் நிபுணர்கள் குழு கண்டறிந்தது,
சிறுவனின் தந்தையிடம் உங்கள் மகனுக்கு சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளுடன் பெற்றோரை அணுகினர், எனினும் பெற்றோர்களது ரத்த வகையானது நோயாளி மகனின் இரத்தவகைக்குப் பொருத்தமானதாக இருக்கவில்லை, மிக கவனமான பரிசீலனைக்குப் பிறகு O ரத்த வகையைச் சேர்ந்த அவரது மகனுக்கு A இரத்த வகையைச் சேர்ந்த சிறுவனின் தந்தை, அவரது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அச்சிறுவனுக்கான சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சைக்கு இது ஒன்றுதான் கிடைக்கக்கூடிய ஒரு விருப்பத்தேர்வாக இருந்தது, அதன் காரணமாக, ABO இணக்கமற்ற சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டது.
12 வயதான சிறுவனின் இரத்தப் பிரிவு அவரது தந்தையின் இரத்தப் பிரிவுக்கு எதிரானதாக இருந்தது, தானமளிக்க முன்வந்த சிறுவனின் தந்தையின் சிறுநீரகம் இச்சிறுவனுக்கு பொருத்தமற்றதாக இருந்ததால்,உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறுநீரகம் நிராகரிக்கப்படும் இடர்வாய்ப்பு இருந்தது.
இந்த சிக்கலான அறுவைசிகிச்சைக்கு தயார் செய்யவும் மற்றும் பொருத்தப்படும் மாற்று உறுப்பு நிராகரிக்கப்படும் இடரைக் குறைப்பதற்கும் பிளாஸ்மா (ஊனீர்) பரிமாற்றங்கள் உட்பட, தனித்துவமான சிகிச்சைகள் இச்சிறுவனுக்கு வழங்கப்பட்டன. சிறுநீரகவியல் துறைத்தலைவர் டாக்டர்.டி.ராஜராஜன் மற்றும் சிறுநீரகப் பாதையில் துறையின் தலைவர் டாக்டர்.செந்தில்குமார் ஆகியோர் தலைமையின் கீழ் சிறுநீரகவியல் துறை சிறப்பு நிபுணர் டாக்டர்.ஜி.பாலாஜி மற்றும் சிறுநீரகப்பாதையில் நிபுணர் டாக்டர். சசிகுமார் போன்ற திறன்மிக்க மருத்துவர்கள் குழு, இந்தியாவிலேயே மிகக் குறைந்த செலவினத்தில் 2023 ஜனவரி 19 ஆம் தேதியன்று, அரிதான இந்த சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சையை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்திருக்கிறது.