திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்த முறை போட்டியிடப் போவது பாஜகவா!! யார் வேட்பாளர்?

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் இந்த முறை போட்டியிடப் போவது
பாஜகவா!! யார் வேட்பாளர்?

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்காளர் எண்ணிக்கையை கொண்டது ஸ்ரீரங்கம் தொகுதி,
அதில் முத்தரையர் சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர், அதனுடன் பிராமணர்கள், முதலியார், படையாட்சி, வன்னியர், பள்ளர், மற்றும் பிற சமூகத்தினரும் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளனர்.

மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த டாக்டர் செல்வி ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி வாகை சூடி முதல் அமைச்சராக பதவி ஏற்றார் . ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்து மலைக்கோட்டை மாநகரில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முதல் -அமைச்சராக அனுப்பி வைத்தன் மூலம் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது.

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கட்சியின் கூட்டணியில் இந்த முறை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அவர்கள் களம் இறங்க வேண்டும் அதுவும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ஸ்ரீரங்கத்தில் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று பெரும்பான்மையான ஆதரவாளர்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது…

அண்ணாமலை, 2011-ஆம் ஆண்டு, கருநாடக மாநில காவல்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 2013-ஆம் ஆண்டு உடுப்பி மாவட்டம் கர்கலாவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டார். பின்னர், உடுப்பி, சிக்கமகளூரு மாவட்டங்களில் காவல்துறைக் கண்காணிப்பாளராக பணியாற்றி, அக்டோபர் 2018-இல் பெங்களூர் நகர தெற்கு காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். 2019-ஆம் ஆண்டு இவர் தனது காவல்துறைப் பணியை விட்டு விலகினார்,

அண்ணாமலை, ஒரு பேச்சாளராகவும் இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர், இவர் ஒன்றிய அரசுப்பணி பயிற்சி மையம், தலைவர்கள் அறக்கட்டளை உள்ளிட்ட பல இலாப நோக்கற்ற அறக்கட்டளைகளையும் தொடங்கி மக்கள் சேவை ஆற்றியவர்,

Bismi

அண்ணாமலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் சா ஆகியோரைச் சந்தித்து அரசியலில் ஒன்றிணைந்து வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புவதாகத் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆகஸ்ட் 25, 2020 அன்று, தேசிய பொதுச் செயலாளர் பி. முரளிதர ராவ், கருநாடக அமைச்சரான சி. டி. இரவி, தமிழகத் தலைவர் லோ. முருகன் ஆகியோர் முன்னிலையில் முறையாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

அண்ணாமலை, கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 24,816 வாக்குகள் பின்னடைவில் திமுக சார்பாகப் போட்டியிட்ட
இரா. இளங்கோவிடம் தோல்வி அடைந்தார், முருகன் மத்திய அமைச்சரான பிறகு, இவர் தமிழ்நாட்டின் பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் ஜூலை 8, 2021 அன்று நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்று தமிழகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சி போல் செயல்படுகிறது என்று பேசும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் இருந்தது, பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவர் இவர்தான் என்று கட்சியினர் இடையே பெயர் பெற்றவர் அடுத்தது தமிழகத்தின் முதல்வராகவும் மாறுவார் எனவும் தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தவர்…

2024 இந்தியப் பொதுத் தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 1,18,068 வாக்குகள் பின்னடைவில் திமுக சார்பாகப் போட்டியிட்ட கணபதி பி. இராஜ் குமாரிடம் தோல்வியடைந்துள்ளார்.

தற்போது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்க சட்டமன்ற தொகுதியில் அண்ணாமலைக்கு என்று தனி மெஜாரிட்டி உள்ளதாகவும் அவருக்காக பல்வேறு சமூகத்தினர் ஆதரவு தருவதாகவும் கூறப்படுகிறது அதனால் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அண்ணாமலை போட்டியிட்டால் மாபெரும் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு சாத்தியமாக உள்ளது என்று அப்பகுதியில் உள்ள அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது என்றும் கூறுகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் ஆசை நிறைவேறுமா களத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் வாக்குகள் விழுமா அண்ணாமலையை வேட்பாளராக தேர்ந்தெடுப்பார்களா என்று பல்வேறு கேள்விகள் எழும் நிலையில் ஸ்ரீரங்கம் பாஜக உறுப்பினர்கள் விருப்பப்படுவதாகும் அப்பகுதியில் கூறுகிறார்கள்.

அதிமுக பாஜக கூட்டணியில் அண்ணாமலை வேட்பாளராக தேர்ந்தெடுப்பாரா, அப்படியே அவர் தேர்ந்தெடுத்தாலும், எடப்பாடி தலைமையிலான கூட்டணியில் வேட்பாளராக இருப்பாரா? தனது ஆதரவாளர்களின் ஆசை நிறைவேறும் வகையில் ஸ்ரீரங்கத்தை தேர்ந்தெடுப்பாரா அல்லது கோயமுத்தூர் பகுதிக்கு செல்வாரா என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்