திருச்சி கேர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா – கிராமாலயா பத்மஶ்ரீ தாமோதரன் பங்கேற்பு!
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. கேர் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் விழாவை தொடங்கி வைத்தார். கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுகுமார் மாணவர்களுக்கான உறுதிமொழி மற்றும் பட்டமளிப்பு விழாவிற்கான அறிக்கையை வாசித்தார்.
மேலும் இவ்விழாவில் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பத்மஸ்ரீ தாமோதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே உரையாற்றினார். அதில், மாணவர்கள் ஒற்றுமை மற்றும் அவர்களுக்கான இலக்கை அடைய இன்றைய நாளில் இருந்து பயணத்தை தொடங்குமாறு எடுத்து கூறினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதில் குறிப்பாக பி.எஸ்.சி இன்டீரியர் டிசைன் பாட பிரிவில் ஒன்று முதல் ஐந்து இடங்களையும், பி.எஸ்.சி விஷுவல் கம்யூனிகேசன் பாட பிரிவில் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களை, பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் பெற்ற மாணவர்களுக்கு தர சான்றுகளை வழங்கினார். இந்நிகழ்வில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.