- Advertisement -

திருச்சி புனித வளனார் கல்லூரி காற்றாலை மின்சாரம் தயாரிப்பு

0

புனித வளனார் கல்லூரி பயன்பாட்டிற்கு என முதன் முதலாக சிறிய அளவிலான காற்றாலை மின்சாரம் தயாரிப்பு.

- Advertisement -

திருச்சி புனித வளனார் கல்லூரி கல்வித் துறையில் அதன் செழுமையான பாரம்பரியத்துடன், உயர்கல்வித் துறையின் மாறிவரும் சூழ்நிலையின் அடிப்படையில் பல்வேறு வழிகளில் புதுமைகளை உருவாக்கி வருகிறது. கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் யோசனைகளை சந்தைப்படுத்தக்கூடிய, வருவாய் ஈட்டும் பொருட்களாக மாற்றுவதற்கு உதவும் தொழில் முனைவோர் செயல்பாடுகளில் (startup) கல்லூரி கவனம் செலுத்துகிறது.

ஜோசப் ஸ்டார்ட்அப் சென்டரின் (JSC) ஒரு பகுதியாக அருட்தந்தை பெர்க்மான்ஸ் வழிகாட்டுதலின் கீழ் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு அவர்களின் யோசனைகளை ஊக்குவிப்பதற்கும், எதிர்காலத்தில் நிறுவனங்களாக உருவாகுவதற்கும் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. கல்லூரிக்கு வெளியில் இருந்து 30மாணவர்கள், 5ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் ஒரு இன்குபேட்டிக்கு இன்குபேஷன் செய்ய JSC இடம் வழங்கியுள்ளது.

Bismi

இதில் குறைந்த மின்சாரத்தில் பயன்படுத்தக்கூடிய எல்இடி விளக்குகள், டிஸ்ப்ளே, 3Dபிரிண்டிங். மற்றும்டி சி பி தயாரிப்புக்கான நிறுவனங்கள் தற்பொழுது செயல்படுத்தப்படுகிறது இதற்கான தொடக்க நிகழ்வு
நடைபெற்றது. இதனை தொடர்ந்து

Vagai

எற்கனவே
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதிலும் கல்லூரி கவனம் செலுத்தி சூரிய ஆற்றல் உற்பத்திக்காக பல சோலார் பேனல்களை நிறுவியுள்ள நிலையில்
தற்போது, ஒரு காற்றாலையை இயற்பியல் உதவிப் பேராசிரியர் முனைவர். அலெக்சாண்டர் மற்றும் மாணவர்கள் அர்பணிப்புடன் வளாகத்தில் அமைக்கப்பட்டது. காற்றாலை ஒரு மணி நேரத்திற்கு 1000 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது, மேலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நூலக கட்டிடத்தின்12 LED விளக்குகள் மற்றும் 5மின்விசிறிகளின் செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் கல்லூரி செயலாளர்
அருட்தந்தை அமல், கல்லூரி முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியசாமி சேவியர் மற்றும்
IQACயின் டீன்கள், முனைவர் ரோஸ் வெனிஸ் மற்றும் முனைவர் குர்ஷித்பேகம் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்