திருச்சி அட்வான்ஸ் GROHAIR , GLOSKIN கிளினிக் 2-ம் ஆண்டு துவக்க விழா – நடிகை ரேஷ்மா பங்கேற்பு!
திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் மேம்படுத்தப்பட்ட அட்வான்ஸ் GROHAIR , GLOSKIN கிளினிக் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கிளினிக்கின் நிறுவன நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இவ்விழாவில் ரசவாதி உள்ளிட்ட படங்களில் நடித்த திரைப்பட நடிகை ரேஷ்மா வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் கே.எம்.எஸ் ஹக்கீம் பிரியாணி மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்த க்ரோ ஹேர், க்ளோ ஸ்கின் ஆகியவை முடி மற்றும் தோல் பராமரிப்புகளுக்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் புரட்சிகரமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. முடி பராமரிப்புக்காக குரோவர் ஆக்சிஜன், லேசர் சிகிச்சை, முடிமாற்று சிகிச்சை, பி.ஆர்.பி சிகிச்சை மற்றும் ஜிஎஃப்சி சிகிச்சை வழங்கி வருகின்றனர். இந்த கிளினிக்கில் சிறந்த உட்கட்டமைப்புகள் உள்ளது. அதிநவீன வசதிகள் மற்றும் வல்லுநர்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கவனிப்பை பெறுவதை உறுதி செய்கின்றனர். புதுமை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை மையமாகக் கொண்டு முடி மற்றும் தோல் பராமரிப்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் தொடர்புக்கு திருச்சி தில்லைநகர் வடகிழக்கு விஸ்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள அட்வான்ஸ் க்ரோ ஹேர், க்ளோ ஸ்கின் கிளினிக்கை தொடர்புகொண்டு பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்பெற வேண்டும்.
Comments are closed.