மக்கள் எதிர்ப்பை மீறி திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையில் உறையூர் குறத் தெரு பகுதியில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.
முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ் குமார் ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன் கலந்து கொண்டு பேசினார்.
மேலும் இந்தப் போராட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் கலை, மாவட்ட துணை செயலாளர்கள் தன்சிங், லதா, பொதுக்குழு உறுப்பினர்கள் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, வேதராஜன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் நாகநாதர் சிவகுமார், ஐடி பிரிவு தருண், சிறுபான்மை பிரிவு நாகூர் மீரான் மற்றும் பகுதி செயலாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், தொழிற் சங்கத்தினர், மகளிர் அணியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.