- Advertisement -

திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரியில் “வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி!” நாட்டிய நாடக நிகழ்ச்சியை துவக்கி வைத்த சபாநாயகர்!

- Advertisement -

திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரியில் “வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி!” நாட்டிய நாடக நிகழ்ச்சியை துவக்கி வைத்த சபாநாயகர்!

திருநெல்வேலி, பாளையஙகோட்டை, ரெட்டியார்பட்டியில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில்,”தமிழ் இணையக் கல்விக்கழகம்” சார்பாக, “தீராக்காதல் திருக்குறள்!” என்னும் தலைப்பின் கீழ், “வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி!” நாட்டிய நாடக நிகழ்ச்சி, (பிப்ரவரி.10ம் தேதி) காலையில், மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாளையஙகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப் தலைமை வகித்தார்.

Vagai
Bismi

மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) குத்து விளக்கு ஏற்றி, துவக்கி வைத்தார். முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த, அய்யன் திருவளளுவரின் திருவுருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய சபாநாயகர், ” மாணவ, மாணவிகள் திருக்குறளை படித்து, அதன்படி நடந்து வாழ்வில் முன்னேற வேண்டும்!”–என்று, அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், தமிழ் இணையக் கல்விக்கழகம் துணை இயக்குநர் அருண்மொழி அம்மையார், சிப்காட் அலுவலர் மா. சுகன்யா, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி கேரேணாப்புக் லிதியா, தமிழ் வளர்ச்சித்துறை மண்டல துணை இயக்குநர் பெ. இளங்கோ, அரசினர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பி.லதா உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்