திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், காவல்கிணறு புதூர் பகுதியில்,உயர் அழுத்த மின்கம்பிகளால் ஆபத்து!நடவடிக்கை எடுக்க, ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், காவல்கிணறு புதூர் பகுதியில்,உயர் அழுத்த மின்கம்பிகளால் ஆபத்து!நடவடிக்கை எடுக்க, ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

 

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், காவல்கிணறு “புதூர்” பகுதியில் உள்ள, ஒரு மின் கம்பம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள், மிகவும் ஆபத்தான நிலையில், அந்தரத்தில் தொங்கிக்கொண்டு நிற்கின்றன. இதன் காரணமாக, அந்த வழியாக, அன்றாடம் வந்து செல்லும் மக்கள் மத்தியிலும், வெளியில் சென்று விட்டு, இரவு பிந்திய நேரங்களில், அந்த வழியாக வரும் மக்கள் மத்தியிலும், மிகுந்த அச்சம் நிலவுகிறது. ஏனெனில், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும், அந்த உயர் அழுத்த மின்கம்பிகள், எந்த நேரத்திலும் கீழே விழுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன.

Bismi

மின் வாரிய உயர் அதிகாரிகள், உடனடியாக இதனை நேரில் பார்வையிட்டு, ஆபத்தான மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை, போரக்கால அடிப்படையில் அப்புறப்படுத்தி விட்டு, புதிய மின்கம்பம் மற்றும் கம்பிகள் அமைக்க வேண்டும்! என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்