- Advertisement -

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமிதம்!

- Advertisement -

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமிதம்!

“தமிழக முதல்வர் உத்தரவுப்படி , வடகிழக்கு பருவமழை தொடர்பாக, வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை சம்பந்தமான முன்னேற்பாடு நடவடிக்கைகள், திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக, முழு வீச்சில் எடுக்கப்பட்டு வரருகிறது!”-என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன், தெரிவித்துள்ளார். பாளையங் கோட்டையில் உள்ள,

Vagai

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப் படையில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள, பேரிடர் மீட்பு சாதனங்கள், தடுப்பு சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை, இன்று (அக்டோபர்.23) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன்,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, அவர் கூறியதாவது:-

Bismi

“மாவட்டம் முழுவதும், பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவல் ஆளினர்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மழை மற்றும் வெள்ளம் சம்பந்தமான தகவல்கள் குறித்து, உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

எந்த நிலைமையையும், எந்த நேரத்திலும் சமாளிப்பதற்கு, மாவட்ட காவல்துறை மிகுந்த விழிப்புடன், இருந்து வருகிறது. மொத்தத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், மாவட்ட காவல்துறை ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது!”-இவ்வாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசரன், தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்