வருமான வரியை உரிய நேரத்தில் செலுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்கலாம் – வருமான வரித்துறை இணை ஆணையர் பேச்சு!

0

அபராத வட்டியை தவிர்க்க வருமான வரியினை உரிய தவணையில் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை இணை ஆணையர் புவனேஸ்வரி திருச்சியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை சார்பில் வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கான வருமானவரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு சிறப்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருமான வரித்துறை இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, வருமான வரித்துறை துணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

- Advertisement -

தொடர்ந்து வருமான வரித்துறை இணை ஆணையர் புவனேஸ்வரி பேசுகையில்:-

நாட்டின் வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வருமான வரியை உரிய நேரத்தில் செலுத்துவது அவசியம். உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து தொகையை திரும்பபெற விழைவோருக்கு, வருமான வரி சட்டம் பிரிவு 270 ஏ படி அபராதம் விதிக்கப்படும். மேலும் வழக்கு தொடா்ந்து நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தைப் பொருத்து சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். எனவே, இதுபோன்ற அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிா்க்க, வருமானக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து கூட்டத்தில் பங்கேற்றவா்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில அனைத்து வணிகா்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் கோவிந்தராஜுலு வணிகா்கள் தரப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசினாா். இந்நிகழ்வில் திருச்சி மண்டல தலைவா் தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவா் ஸ்ரீதா் திருச்சி மாநகர தலைவா் எஸ்ஆா்வி. கண்ணன், மற்றும் வருமான வரித்துறை துணை ஆணையா் கருப்பசாமி பாண்டியன் மற்றும் வள்ளியம்மை, ஜான்ரசல் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வணிகா்கள் கலந்து கொண்டனா். இறுதியில் வருமான வரித்துறை அதிகாரி ஜான் ரஸ்ஸல் நன்றி உரையாற்றினார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்