திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் மூன்று முழங்கால் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை – மக்கள் பாராட்டு
திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் மூன்று முழங்கால் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை – மக்கள் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று முழங்கால் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக தலைமை மருத்துவர் மற்றும் மயக்கவியல் நிபுணர் மறு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மேற்பார்வையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள்
மறு நெருங்கில்லி மற்றும் செவிலியர்கள் மகேஸ்வரி வசந்தி ஆகியோரால் வெற்றிகரமாக செய்யப்பட்டது, மேலும் சிகிச்சை பெற்ற மூன்று நோயாளிகளின் பெயர்
விவரம்
1.சோலையம்மாள்
வயது ( 67 ) பாப்பா வயல்

2.சின்னையா வயது (68 ) பாப்பா வயல்
3. பொன்னழகு வயது (67) நம்பலகுடி
பகுதிகளை சேர்ந்த மூன்று நபர்களுக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில்
முதியோர்களை அமைச்சர் ரகுபதி அண்ணா அரசு மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து நலம் விசாரித்தார், உடன் ஒன்றிய செயலாளர் ஆறு சிதம்பரம்,வடக்கு
ஒன்றிய செயலாளர் கணேசன்,
மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராமசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.
அரசு காப்பீட்டு தொகையில் இது போன்று மூட்டு மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் திருமயம் அரசு மருத்துவமனையில் இது போன்ற அறுவை சிகிச்சைகள் நடைபெறுவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சி அளிக்கின்றது மற்றும் தலைமை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த மறு நெடுங் கில்லி அவர்களுக்கும் உரிமையாக இருந்த செவிலியர்கள் மகேஸ்வரி வசந்தி ஆகியோரால் வெற்றிகரமாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பொதுமக்கள் சார்பாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன…


Comments are closed.