திருச்சியில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, ஆன்லைன் டோக்கன் வழங்கும் முறையை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
திருச்சியில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, ஆன்லைன் டோக்கன் வழங்கும் முறையை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் பகுதியில் ஜனவரி 15ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் முறையில் டோக்கன் வழங்குவதை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வர்ணனையாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து


தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வர்ணனையாளர்கள் சங்கம் மாநில தலைவர் செங்குட்டுவன் அளித்த பேட்டியில்..,
திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அங்கு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு
ஆன்லைன் முறையில் டோக்கனை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். பாரம்பரிய முறைப்படி மாட்டின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கும் முறையை செயல்ப்படுத்த வேண்டும். திருச்சி பெரிய சூரியூரில் அரசு சார்பாக திறக்கப்படும் ஜல்லிக்கட்டு மைதானத்தில் அனைவரும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக மைதானத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி தர வேண்டும் என்றார்.





Comments are closed.