சென்னையில் கொட்டித்தீர்த்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்.
சென்னையில் கொட்டித்தீர்த்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்.
சென்னை, புறநகரில் மழை கொட்டித்தீர்த்தது . இதனால், பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தாது .பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சென்னையில் கடந்த சில நாட்களாக, டிட்வா புயல் காரணமாக மழை கொட்டித்தீர்த்தது. டிட்வா புயல் வலுவிழந்தாலும் பல இடங்களில் கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடதமிழகம், புதுச்சேரி கடலோரப்பகுதியில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் கடந்த 30-ம் தேதி வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. சென்னை அருகே நிலைகொண்டிருந்தது .இது, சென்னை அருகே கரையை கடப்பதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை மிதமான மழை முதல் கனமழை வரை விட்டுவிட்டு பெய்தது .குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. மாதவரம், கொளத்துார், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், கொடுங்கையூர், புழல் – செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, விளாங்காடுபாக்கம் என பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. அந்தவழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது மற்றும் கடற்கரைக்கு செல்ல 3-வது நாளாக நேற்றும் தடைவிதிக்கப்பட்டது.திருவொற்றியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கினர். மழை நீர்தேங்கிய இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள், தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. சென்னையில் 48 இடங்களில் விழுந்த மரங்களை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். முகாம்களில் உணவு விநியோகம் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சென்னையில் 215 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
சென்னையில் உள்ள 27 சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீர் உடனடியாக மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Comments are closed.