- Advertisement -

தனது கணவனை மீட்டு தர வேண்டுமென மனைவி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

- Advertisement -

தனது கணவனை மீட்டு தர வேண்டுமென மனைவி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

 

Bismi

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நாளில் திருச்சி குண்டூர் பகுதியை சேர்ந்த ராணி தெரிவித்தது.. கடந்த 2004 ஆம் ஆண்டு கட்டட வேலைக்குச் செல்லும் பொழுது முத்துக்குமார் என்பவருக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டோம், அன்றைய தினத்திலிருந்து 2023 வரை எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல், சின்ன சின்ன சண்டைகள் வந்தாலும் நிம்மதியாக குடும்பம் நடத்தி வந்தோம், எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது, அதன் பிறகு எனது கணவரின் தங்கச்சி குழந்தையை 2011 ஆண்டு தத்தெடுத்து இருவரும் வளர்த்து வந்தோம், அந்த குழந்தையின் ஆதார் அட்டை முதல் அனைத்திலும் அப்பா, அம்மா என்ற பெயர் வரும் இடத்தில் எங்களது பெயர் தான் இருக்கிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு எனது கணவர் முத்துக்குமார் என்னிடம் கோபித்து கொண்டு தங்கச்சி மகளையும் அவரின் உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார், அங்கு தங்கச்சி குழந்தை வயதிற்கு வந்து விட்டதால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அவர் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு விட்டதாக கூறுகிறார்கள். விழுந்ததில் அவரால் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு மோசமான நிலைமையாக ஆகிவிட்டது. அதன் பிறகு அவருக்கு தனியாக வீடு எடுத்து கொடுத்து கல்லுகுழி பகுதியில் தங்க வைத்து விட்டனர். அவரை பார்ப்பதற்கும் அப்போது என் கணவரை என்னிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று காவல்துறையிடம் புகார் கொடுத்து அவரை பார்ப்பதற்கு முயற்சி செய்தேன். ஆனால் அவரது உறவினர்கள் என்னை அனுமதிக்கவே இல்லை, என்னை அடித்து துன்புரித்து மண்டையை உடைத்தனர். அதன் பிறகு அவரை யாரும் கண்டு கொள்ளாமல் தனிமையில் விட்டு விட்டனர், அப்பொழுது எனது கணவர் முத்துக்குமார் என்னை தொடர்பு கொண்டு ராணி என்னை நீ தான் கடைசி வரை பார்த்துக் கொள்ள வேண்டும். என்னால் சிறுநீரகம் கழிக்க கூட செல்ல முடியாது நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அழுதார் நான் உடனடியாக அவரை பார்ப்பதற்காக சென்று அவரிடம் பேசி அவர் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டு மீண்டும் என்னுடன் என் கணவரை அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நன்றாகத் தான் அவரை பார்த்து வந்தேன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு தொடர்ந்து மருத்துவம் செய்து வந்தேன். இந்நிலையில் நீ தனிமையில் இருந்து என்னை பார்ப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுகிறாய் எவ்வளவுதான் கடன் வாங்குவாய் அதனால் மேலும் மருத்துவம் பார்ப்பதற்கும் வாங்கிய கடனை அடைப்பதற்கு எனது கணவர் ஒரு இடத்தை எனக்கு செட்டில்மெண்டாக எழுதி கொடுத்தார். அதனை விற்று நமக்கு இருக்கும் கடனை அடைக்கும்படியும் கூறினார். நாங்கள் இருவரும் இணைந்து தான் இடத்தை விற்று கடனை அடைத்தோம். மேலும் அவருக்கு தனியார் மருத்துவமனையில் பல சிகிச்சைகள் எடுத்தோம் இணைந்து நன்றாகத் தான் வாழ்ந்து வந்தோம், அப்போது எனது மகள் குழந்தை பெற்று வீட்டிற்கு வந்திருந்த நிலையில் எனது கணவர் நமது பேரனுக்கும் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது எனவே நான் முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொள்கிறேன் என்னை சேர்த்து விடுகிறாயா என்று என்னிடம் கேட்டார். இல்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிய பொழுதும் எனக்கு மனசு ஒப்பவில்லை இதனால் மகளின் குழந்தைக்கும் தொற்று பறவை வாய்ப்புள்ளது. எனவே நான் முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொள்கிறேன் என்று அவராக முதியோர் இல்லத்தை விசாரித்து அய்யம்பட்டி பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்தார், ஆனாலும் அவர் முதியோர் இல்லத்தில் அதிக நாள் இருப்பதில்லை 10 நாள் முதியோர் இல்லத்தில் இருப்பார் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று மீண்டும் 20 நாள் வீட்டில் இருப்பார் அவருக்கு தொடர்ந்து மருத்துவ ஆலோசனை பெற்று மருத்துவம் செய்து வந்தேன், இந்நிலையில் அவர் உறவினர்கள் தாய்மாமன் கணேசன், சித்தி சரஸ்வதி, அம்மா பத்மாவதி ஆகியோர் காவல்துறை அதிகாரியுடன் முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று எனது கணவரிடம் பேசி அவர் மனசை மாற்றி அவரை முதியோர் இல்லத்தில் இருந்து அழைத்துச் சென்று விட்டனர். இதனை தொடர்ந்து நவல்பட்டு காவல் நிலையத்தில் என் மீது தவறான புகார் கொடுத்து என்னை அவமானப்படுத்துகிறார்கள், வீட்டிற்கு காவல்துறை அதிகாரி மற்றும் ரவுடியாக்கள் போன்ற குண்டர்களும் வந்து என்னை கொன்று விடுவேன் என்றும் மிரட்டுகிறார்கள் என்னிடம் இருந்த மூன்று இடத்தின் பத்திரத்தை வாங்கி எனது கணவர் உறவினிடம் ஒப்படைத்து விட்டனர், அதோடு உன்னிடம் 55 பவுன் நகை இருப்பதாகவும் அதனை உடனடியாக அவரிடம் திருப்பி தர வேண்டும் என்றும் மிரட்டுகிறார்கள், எனது கணவர் அனுமதியுடன் இடத்தை விற்று கடனை அடைத்த தொகையை என்னிடம் கேட்டால் நான் எப்படி அதனை திருப்பி தர முடியும் என்று கேட்டால் நீ தவறானவள், முத்துக்குமார் உன்னை திருமணமே செய்து கொள்ளவில்லை உன்னை வைத்துக்கொண்டார் என கேவலமாக போலீசார்களே என்னை மிரட்டுகிறார்கள். அவர் எனது கணவர் தான் என்பதற்கு என்னிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, தொழிலாளர்கள் நலவாரிய அட்டை என அனைத்தும் உள்ளது அதனை பார்க்காமல் கூட காவல்துறையினர் என்னை இழிவுபடுத்தி பேசுகிறார்கள், படிக்கத் தெரியாது என்ற காரணத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதி கையெழுத்து பெற்றுக் கொள்ளலாம் என்று என்னிடம் எழுதிப் பெற்றுக் கொண்டனர். அதை போட்டோ எடுத்து படிக்க தெரிந்த நபரிடம் என்ன எழுதி இருக்கிறது என்று கேட்டபோது விற்ற சொத்தில் பாதி பணத்தை நான் தருவதாகவும், அவர் சம்பாதித்து 55 பவுன் வீட்டில் வைத்திருப்பதாகவும் அதனை திருப்பித் தர வேண்டும் எனவும் எழுதி பெற்றுள்ளதாக படித்தவர் கூறினார். அதையும் இந்த மனுவின் பின்புறம் இணைத்துள்ளேன் அதோடு எனது கணவர் பெயரில் திருச்சி மாவட்டத்தில் இன்னும் 2 இடங்களில் சொத்து இருப்பதை தெரிந்து கொண்டு எனது கணவரின் மனதை மாற்றி அவரை எனக்கு எதிராக பேச வைத்து, என்னிடம் இருந்து அவரை பிரித்து அந்த சொத்துக்களை எல்லாம் விற்று அவரிடம் இருந்து அனைத்து பணத்தையும் பெற்று கொள்ளலாம் என்ற ஆசையில் உறவினர்கள் இதை செய்து வருகிறார்கள், என்று தெரிகிறது, எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், அவர்கள் எனது கணவரை என்னிடமே சேர்த்து வையுங்கள், அவரை விட்டால் எனக்கு வேறு யாரும் துணை இல்லை, வளர்ப்பு மகளையும் 2023 ஆம் ஆண்டு மீண்டும் அவரை கூட்டி சென்று விட்டனர், அதனால் இவர்கள் என்னை கொலை செய்ய கூட தயங்க மாட்டார்கள் என்று அச்சம் எனக்கு இருந்து வருகிறது எனவே எனது கணவரை அவர்கள் உறவினிடமிருந்து மீட்டு என்னுடனே சேர்த்து வைக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பேட்டி – ராணி – முத்துக்குமார் – மனைவி

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்