கிராம நிருவாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிருவாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் நவீன முறையில் அமைத்து தர வேண்டும் – தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம்
கிராம நிருவாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிருவாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் நவீன முறையில் அமைத்து தர வேண்டும் – தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம்
தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில்
வே.சசிகுமார் B.E. அவர்கள் மாநில தலைவர் TNVAOA தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
வ.தியாகராஜன் M.Sc., அவர்கள் மாநில பொருளாளர் TNVAOA போராட்ட வரவேற்புரை ஆற்றினார்
சி.குமார் B.Sc., அவர்கள் மாநில பொது செயலாளர் TNVAOA போராட்ட பேரூரை ஆற்றினார்
தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கீழ் வரும் கோரிக்கைகள் முன்னெடுத்து தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது
கோரிக்கைகள் :
1.கிராம நிருவாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிருவாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் செய்யப்பட்ட கிராம நிருவாக அலுவலகமாசு அமைத்து தரக்கோருதல்.

2.கிராம நிருவாக அலுவலர்களின் TNPSC நேரடி நியமான முறையில், கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க கோருதல்.
3.கிராம நிருவாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ள நிலையில் பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிருவாக அலுவலர் எனவும், இருபதாண்டு பணிமுடித்த கிராம நிருவாக அலுவலர்களுக்கு, சிறப்புநிலை கிராம நிருவாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட கோருதல்.
4.கிராம நிருவாக அலுவலர்களின் பதவி உயர்வில் கிராம நிருவாக அலுவலர். இளநிலை உதவியாளர், தட்டச்சர்களின் விகிதாச்சாரங்களுக்கேற்ப. 30 சதவீதம் என்பதிலிருந்து 50 சதவீதமாக மாற்றம் செய்து, கிராம நிருவாக அலுவலர்களின் பதவி உயர்வுக்கான கால வரம்பை ஆறு ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிட கோருதல்.
5.தேர்வுநிலை கிராம நிருவாக அலுவலர்களுக்கு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும், சிறப்புநிலை கிராம நிருவாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியமும் வழங்க கோருதல்.
6.TSLR பட்டா மாறுதலில் கிராம நிருவாக அலுவலர்களின் பரிந்துரை பெற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும். இதுநாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த கோருதல் போன்ற ஆறு கோரிக்கைகள் முன்னெடுத்து போராட்டம் நடைபெற்றது


Comments are closed.