மக்களை எளிதில் ஈர்க்கும் விதமாக த.வெ.க.வுக்கு மோதிரம் சின்னம்!
மக்களை எளிதில் ஈர்க்கும் விதமாக த.வெ.க.வுக்கு மோதிரம் சின்னம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில் முன்னேற்பாடுகளை தவெக கட்சி தீவிரப்படுத்தி வருகிறது.சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட சில சின்னங்களை குறிப்பிட்டு அதில் ஒன்றை ஒதுக்க விஜய் தரப்பினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
தவெகவின் சின்னம் 4 தமிழ் எழுத்துகளை கொண்டதாக இருக்கலாம் என்றும், அது மோதிரமாக இருக்கக்கூடும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே, த.வெ.க. சார்பில் ஆட்டோ சின்னம் கேட்கப்பட்டிருந்தது. இந்த சின்னம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு சென்று விட்டதால், அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் என்று சின்னம் கேட்கப்பட்ட நிலையில், மோதிரம் சின்னம் த.வெ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் தன்னுடைய கட்சிக்கான சின்னத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Comments are closed.