தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முன்னெப்போதும் இல்லாத பெரும்பான்மை கிடைக்கும் – பிரதமர் நரேந்திர மோடி.

தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முன்னெப்போதும் இல்லாத பெரும்பான்மை கிடைக்கும் – பிரதமர் நரேந்திர மோடி.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி அராரியா மாவட்டத்தின் ஃபோர்ப்ஸ்கஞ்சில் நடைபெறும் பொதுக் கூட்டம் மற்றும் பகல்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிஹாரில் நடைபெறும் ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழா மக்களிடையே அற்புதமான உற்சாகத்தைக் காண்கிறது.

Bismi

இது சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முன்னெப்போதும் இல்லாத பெரும்பான்மை கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது. இந்த உற்சாகமான சூழ்நிலையில், அராரியாவின் ஃபோர்ப்ஸ்கஞ்சில் காலை 11:30 மணியளவில் மற்றும் பகல்பூரில் பிற்பகல் 1:30 மணியளவில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் எனது குடும்ப உறுப்பினர்களின் ஆசீர்வாதங்களைப் பெற ஆவலாக உள்ளேன்’ என்று தெரிவித்தார்.

பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது.

18 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய இந்த தொகு​தி​களில் மொத்​தம் 122 பெண்​கள் உள்​ளிட்ட 1,314 வேட்​பாளர்​கள் போட்​டி​யில் உள்​ளனர். வாக்​காளர்​கள் எண்​ணிக்கை 3.75 கோடி. மொத்​தம் 45,341 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்